வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாக உள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவரசன்குளம் பகுதியில் கணவன் விட்டுச் சென்ற நிலையில், பெண் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த பெண் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இரு பிள்ளைகளும் சிறிய தந்தையாருடன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் 17 வயது சிறுமி உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தாயின் இரண்டாவது கணவனரான சிறிய தந்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.