ஐந்து மாத காலத்திற்கு கர்பிணி பெண்களுக்கு இலவச போஷாக்கு உணவு வழங்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம்.

0
183

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட போஷாக்கான உணவுகளை ஐந்து மாத காலத்திற்கு வழங்க நுவரெலியா பிரதேச சபையூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடர் சபை தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் 11/03/2022 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இதன்போது தவிசாளர் வேலுயோகராஜின் பிரதான இக்கோரிக்கைக்கு அமைய சபையின் நிதியொதுக்கீட்டில் இலவசமாக வழங்க தீர்மானிக்க அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்று நிறைவேற்றினர்.

மேலும் நுவரெலியா பிரதேச சபையூடாக செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க கலந்துரையாடப்பட்டதோடு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் ஊடாக பல நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.அதே சந்தர்ப்பத்தில் கந்தப்பளை நகரின் உடற்பயிற்சி நிலையம் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியொதுக்கியமைக்கு சபை தவிசாளர் என்ற ரீதீயில் வேலு யோகராஜ் ஊடாக நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here