எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி 70 அடி பள்ளத்தில்  பாய்ந்து விபத்து_ மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

0
135

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை டயகம பிரதான வீதியில் ஆக்ரோவா பகுதியில் நேற்று (16) திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் தோட்டத்திற்கு சொந்தமான லொறி 15 ம் திகதி அன்று இரவு  கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு சென்று  டீசல் ஏற்றிக்கொண்டு 16 இன்று அதிகாலை ஒரு மணிக்கு  குறித்த தோட்டத்திற்கு செல்லும்போது  அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியில் ஆகுரோவா பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில் லொறியில் சென்ற சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் டயகம பிரதேச வைத்தியசாலையசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் ஒருவர் மேலதிக. சிகிச்சைக்காக நுவரெலியா. மாவட்ட  வைத்தியசாலைக்கு. மாற்றப்பட்டனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக. இந்த விபத்து ஏற்பட்டிருக்கூடுமென ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம அக்கரப்பத்தனை  பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

 

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here