கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெணிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ரயிலில் பயணித்த மேற்படி சுற்றுலா பயணி பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை பிற்பகல் தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.



