கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விறகடுப்பு!

0
170

நாடு முழுவதும் நிலவும் கடும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் அறையிலும் விறகு அடுப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் சமையல் அறைக்கான எரிவாயு விநியோகம் எப்போது நிறுத்தப்படும் என்பது தெரியவில்லை என்பதால், விறகு அடுப்பை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயு இல்லை என்பதால், நோயாளிகள் உணவகம் அல்லது வெளியில் உள்ள உணவங்களில் உணவை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், விறகு அடுப்பையாவது தயார் செய்து உணவை சமைத்து கொடுப்பது முக்கியம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தங்கி சிகிச்சை பெறும் நோயாிகளுக்கான உணவு தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here