பூண்டுலோயா பகுதியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் தோட்ட ஆலய பரிபாலன சபையினருக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு பூண்டுலோயா பொது மண்டபத்தில் வைத்து இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய மருதபாண்டி ராமேஸ்வரன் அரசாங்கத்தில் நிதி நிலமை மோசமாக காணப்பட்டாலும் மலையகத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தடைப்பெறவில்லை. அதற்கான முழு செயற்பாடுகளையும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் செய்து வருவதாகவும் கடந்த வருடம் மட்டும் 700 மில்லியனுக்கு மேல் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.