சிவனொளிபாதமலை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த வேன் ஒன்று வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் சாரதி உட்பட நான்கு பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொகவந்தலா பிரதான வீதியில் வெஞசர் பகுதியில் இன்று (21) திகதி மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவனொளிபாதமலையினை தர்சித்து விட்டு ஹம்பந்தோட்டை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிpலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளது பிரதேச வாசிகள் காயமடைந்தவர்களை சுவசரிய அவசர நோய் காவு வண்டியின் மூலம் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸாhர் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
விபத்தின் போது நான்கு பேர் வேனில் பயணித்தாகவும் இதில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஏனைய மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்கள் ஹம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.