அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 40% அதிகரிப்பு

0
186

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here