தமிழர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள பாடசாலை!

0
140

யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா நேற்றையதினம் (24) நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப் பாடசாலையானது பல கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சிங்களப் பாடசாலைகள் 30 வருடகால யுத்தத்தின் போது மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிங்கள மக்களும் தென் மாகாணத்திற்கு இடம்பெயர்ந்ததாக மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் செயலாளர் வண.தேவாகல தேவலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்கள சமூகம் சம உரிமையும் கல்வி உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் பிரிவினைவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் உரிமைகளை அபகரிக்க செயற்படுவதாகவும், இது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here