சீனாவில் மீண்டும் லாக்டவுன்!

0
190

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பெரிய எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளை சந்தித்து வரும் சீனா மீண்டும் லாக்டவுனை அறிவித்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பெரிய எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளை சந்தித்து வரும் சீனா மீண்டும் லாக்டவுனை அறிவித்துள்ள நிலையில், ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான், வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவில் சில செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

சீனாவில் 2021-இல் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமான தொற்றுநோய் பரவல் இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. தொற்று நோயை விரைவில் ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் பல சீன மாகாணங்கள் மற்றும் நகரங்களில் பெய்ஜிங்கின் ‘ஸீரோ-டாலரான்ஸ்’ இலக்கிற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனுக்கும் பொருந்தும்.

ஷென்சென் – சீனாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த வாரம் டஜன் கணக்கான புதிய தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின் வெகுஜன சோதனைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. ஆகையால் ஷென்செனில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படியும் மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஷென்செனில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இடையூறுகளை சமாளிக்க பேக்கப் பிளான்ட்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here