நுவரெலியா பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக தனியார் பஸ் உரிமையாளர் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
இன்று காலை 8 மணி முதல் இவ் போராட்டம் இடம்பெற்று வருகின்றது , இதன் போது இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்களுக்கு மாத்திரம் டீசல் வழங்குவதாகவும் , தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்குவது இல்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .
இதன் போது இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கலையும் உதாரணமா வெளிமடை – கொழும்பு
நுவரெலியா – ஹட்டன்
நுவரெலியா – கண்டி
போன்ற போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கலையும் நிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன இதன் போது நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது