தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர புதுகாடு பிரிவில் ஆலமர கிளையொன்று முறிந்து அருகிலிருந்த ஆலயத்தின் மீது விழுந்ததில் ஆலயம் சேதமாகியுள்ளது.
04/04/2022 திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிக காற்றினால் குறித்த மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.தோட்டநிர்வாகத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்ததற்கு இணங்க மரக்கிளையை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்