அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறது இ.தொ.கா !

0
172

கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

இதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானித்தனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றதென்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here