உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டே இருக்கும் வேலையில் இந்தியாவில் 4வது அலை உருவாகியுள்ளது.
சீனாவில் ஆரம்பித்த வைரஸ் கடந்த சில நாட்களாக குறைந்தாலும், தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கு பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மேலும், சீனாவில் ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த வைரசால் தான் பாதிப்பு அதிகரிப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், சீனாவில் பரவி வரும் புதிய வகை ஒமைக்ரான் எக்ஸ்.இ வைரஸ் தொற்று இந்தியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் ஒமைக்ரானின் துணை திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என சுகாதார இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.