ஹட்டன் பகுதியில் சுத்திகரிப்பாளர்களை கௌரவித்து உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0
181

ஒரு பிரதேசத்தின் தூய்மைக்கும் அழகுக்கும் ஆரேர்க்கியத்திற்கும் முக்கிய பங்காற்றுபவர்கள் ஒரு நகரத்தின் சுத்திகரிப்பாளர்கள் என்பதனை உணர்ந்து தும்புறுகிரிய பிரதேசத்தில் சுத்திகரிப்பில் ஈடுபடும் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் சுத்திகரிப்பாளர்களை ஹட்டன் தும்புறுகிரிய அபிவிருத்தி சங்கம் இன்று (10) இவர்களை கௌரவித்து அவர்களுக்கு புத்தாண்டினை முன்னிட்டு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கொரோனா காலத்திலும் ஏனைய நாட்களிலும் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் அகற்றும் குப்பைகள் மற்றும் பிரதேசத்தில் வீசி எறியப்படும் பொலீத்தீன் உறைகள்,பிலாஸ்ரிக் போத்தல்கள் உட்பட அனைத்து கழிவுகளையும் அகற்றி பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருப்பதற்கு கைமாறாக இவர்களுக்கு இன்று பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தி. அரசி மா,சீனி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

குறித்த உணவுப்பொருட்களுக்கான அனுசரனையினை பிரதேசத்தில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன.
தும்புறுகிரிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் பணிப்பாளரும் கவிஞ்ஞருமான சு.முரனளிதரன் ஹட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் மெய்யநாதன்,தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் உதவி பணிப்பாளர் சத்திவேல் உட்பட வர்த்தகர்கள் ஆசிரியர்கள் ,என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here