ஒரே மேடையில் பல்துறைசார்ந்த 100 இற்கும் மேற்பட்டோர் கௌரவிப்பு.

0
126

முன்பள்ளிக் கல்வியினை நிறைவு செய்த மாணவர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்றது.
அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள முன்பள்ளிகளில் கல்வி பயின்று பாடசாலைகளுக்கு உள்வாங்கவுள்ள சிறார்களை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களின் கலைக் கலாசார அம்சங்கள் வெளிக்கொணரும் நிகழ்வும் இன்று (17.04.2022) அக்கரப்பத்தனை மன்றாசி நகரத்திலுள்ள நிசாந்தினி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது 16 முன்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தததுடன் இவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களை பயிற்றுவித்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இதன்போது பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேநேரம் ஊடகவியலாளர்கள் , சமூக சேவையாளர்கள், வைத்தியர்கள், அரசியல் பிரமுகர்கள், சமயப்பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் பல்வேறு துறைச்சார்ந்தவர்கள் இதன்போது பொன்னாடையணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக இடம்பெற்றன.இந்த கௌரவிப்பு விழாவில் நாட்டையும் நாட்டு மக்களையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையும் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிடோ நிறுவனத்தின் இணைப்பதிகாரி கே.புஸ்பராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி துரைராஜ் வெஸ்மி, பிரிடோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சந்திரசேகரம், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here