நுவரெலியா மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று மாலை முதல் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றன.
அட்டன் பகுதியில் இன்று பெய்த கடும் மழை காரணமாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அட்டன் கொழும்பு பிரதான வீதி நீரில் மூழ்கின. குறித்த வீதியில் 1அடி வரை மழை நீர் வழிந்தோடியதனால் வீதியினூடான போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகின.
மழையுடன் கடும் பனியும் காணப்படுவதால் அட்டன் கொழும்பு, அட்டன் நுவரெலியா பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் 2 மணியளவில் கடுமையான மழை பெய்ததன் காரணமாக கால்வாய்கள் நிரம்பி மழைநீர் வீதியில் வழிந்தோடியதனால் பாடசாலை விட்டு வீடு செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மலைவாஞ்ஞன்