வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை; 50 பேர் பலி! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

0
136

நைஜீரியா நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் சில பகுதிகளில் அரசுக்கு தெரியாமால் சட்டவிரோதமாக சில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 50 பேர் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here