மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

0
153

கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்று (27.04.2022) காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று மதியம் பனிரெண்டு மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

இதில் ஹோட்டல்காரர்கள், விவசாயிகள், மற்றும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்காகவே மக்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுகொள்கின்றனர்.

மின்வெட்டு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வதாக அட்டன் மற்றும் கொட்டகலை சூழவுள்ள பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் நிற்க முடியாத சூழ்நிலையில் அந்தபகுதியில் தரையில் அமர்ந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாங்க பிரதான வீதியின் ஓரத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் வரை நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here