இன்று நாங்கள் தொழிலாளர் தினத்தினை கொண்டாடுவதற்காக கூடியிருக்கின்றோம். என்று கூற முடியாது எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக போராட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்க்கின்றனர். என வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் தலைவி சத்தியவாணி தெரிவித்தார்.
வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் மேதின எதிர்ப்பு நடவடிக்கையும் கூட்டமும் நேற்று (01) திகதி மஸ்கெலியாவில் நடைபெற்றுத. அதில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…….
இலங்கையில் இன்று வீட்டு வேலையில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வீட்டு வேலை தொழிலில் ஈடுபடுகின்றார்கள். இன்று அவர்கள் அதிகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்
இன்று இந்த நாட்டில் அவர்களுக்கு என்று ஒரு சட்டம் இல்லாததன் காரணமாக அவர்கள் இன்று வீட்டு வன்முறை பொருளாதர பிரச்சினை, வேலை நிறுத்தம் செய்யப்படுகின்றார்கள் இதற்கு பிரதான காரணம் இவர்களுக்கு என்று ஒரு சட்டம் கிடையாது ஏனைய தொழில்களைப்போல் வீட்டு வேலை தொழிலுக்கு உரிய சட்டமில்லாததன் காரணமதக பாதிக்கப்படுகிறார்கள் எனவே ஏனைய தொழில்களுக்கு உள்ளது போல் தொழில் சட்டங்களும் பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என இந்த உழைபாளர் தினத்தில் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது வீட்டு வேலை சங்கத்தின் உறுப்பினர்கள் மஸ்கெலியா நகரில் அவர்களின் உரிமைகள் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர் அவர்கள் வீதியில் ஓரமாக நின்று ‘உறுதி செய் வீட்டு வேலை தொழிலை உறுதி செய்’ ‘வேண்டும் வேண்டும் சட்டம் வேண்டும்:’ போன்ற கோசங்களை எழுப்பிய வாறு எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.