நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதைய அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, அடையாளம் காணப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பல பிரிவுகளின் கீழ் உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முக்கியமாக 3.34 மில்லியன் குடும்ப அலகுகளுக்கு மாதாந்தம் 4,455 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட செலவில் அரசாங்கம் மாதாந்தம் 13,364 மில்லியன் ரூபாவை செலவிடும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி தற்போது வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை ரூ. 2000 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.3000 ஆயிரமாக சேர்க்கப்பட்டு ரூ.5,000 வழங்கப்பட்ட உள்ளது.தற்போது 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையாக ரூ.5,000 பெற்று வரும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக ரூ.2500 வழங்கவும் உதவித்தொகைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்படும்.
தற்போது ஊனமுற்றோர் உதவித் தொகையாக ரூ.5,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.2500 வழங்கவும் உதவித்தொகைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்படும்.
சிறுநீரக நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.2500 வழங்கவும் உதவித்தொகைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்படும்.
தற்போது சமுர்த்தி பெறும் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் மூன்று முக்கிய பிரிவுகளுக்கு கூடுதல் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளது. இதன்படி தற்போது சமுர்த்தி கொடுப்பனவாக 1900 ரூபா பெறுவோருக்கு கூடுதலாக 3100 ரூபா வழங்கப்படும்.இதன்படி, தற்போது 3,200 ரூபா சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு கூடுதலாக 3100 ரூபா வழங்கப்படும்.
தற்போது சமுர்த்தி கொடுப்பனவாக ரூபா 4,500 பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகளுக்கு 3,000 ரூபா வழங்கப்படும்.
இதேவேளை, சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 732,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பணவு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.