கோமாவில் இருக்கும் சிவனேசனுக்கு வைத்தியம் பார்க்க இ.தொ.கா தயார்!

0
221

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் எவராலும் அசைக்க முடியாத கட்சி என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதினக் கூட்டத்தில்  கூறியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை  அளித்துள்ளது.  மேதினக் கூட்டத்தை கூட நடத்த முடியாத கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவனேசன்   மாறுவேடத்தில் எங்கள் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு  எங்கள் தலைவரின் உரையை வரிவரியாக கவனித்தது  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வலிமையை வெளிப்படுத்துகிறது.  சிவனேசன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆணி வேரை அருத்ததாகவும், 06 MPகளாக  இருந்த இ.தொ.காவை இரண்டு MPகளாக ஆகியதாகவும், தாங்கள் 6 MP பெற்றதாகவும் பெறுமைப்பீத்திக் கொண்டிருக்கும் கோமாவில் இருந்து எழுந்து வந்த   சிவனேசனுக்கு, தங்கள் கட்சி 6 MPகளை பெற்று 50 ரூபாய் கூட பெற்றுத்தர வக்கில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இ.தொ.கா  பாராளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களை மட்டும்  வைத்துக்கொண்டு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர் இணைந்து  அரசுக்கு அழுத்தம் கொடுத்து  1000 ரூபாயை வர்த்தமானியினூடாகபெற்று தந்ததை நினைக்கும் பொழுது இ.தொ.கா தொடர்ந்தும்  ஆழமரமாக தான் உள்ளது. ஆனால் 6 MPகளை வைத்துள்ள உங்களுடைய கட்சி காளான்கள் போல் உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்த 6 MPகளை வைத்து  தான் 52 நாட்களுக்கு பிறகு மீண்டும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த  நேரத்தில் கூட 50 ரூபாய் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று நினைக்கும் போது 6 பேரும் பாராளுமன்றத்தில் இருப்பதும் ஒன்றுத்தான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுத்தான் என  இ.தொ.காவின் உப தலைவர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

மக்களுக்கு சேவை செய்ய வழங்கிய இராஜாங்க அமைச்சு பதவியை கேவலப்படுத்த வேண்டாம் என்பதோடு, எங்கள் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கெபினட் அமைச்சராக இருந்தப்பொழுது, உங்களுடைய கட்சி தலைவர்  அந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்று  பணியாற்றினார் என்பதை  கோமாவில் இருக்கும் சிவனேசனுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மேலும் எங்கள் தலைவர் செந்தில் தொண்டமானைப் பற்றி பேசுவதற்கு தாங்களுக்கோ தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கோ எந்தவிதமான அருகதையும் கிடையாது. அவர் முதல் முதலாக தேர்தலை சந்தித்த  பொழுது  2009 ஆம் ஆண்டு 21000 வாக்குகளை பெற்றார்,அடுத்து 2014 ஆம் ஆண்டு   தேர்தலில் 33000 வாக்குகளையும், அதற்கு பிறகு 2022ம் ஆண்டு   கிட்டத்தட்ட 40000 வாக்குகளை பெற்றிருந்தார். மலையகத்தில்  அவருடைய வளர்ச்சி படிப்படியாக முன்னேறியுள்ளது. ஆனால் உங்களுடைய தலைவர் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 105,528  வாக்குகளைப் பெற்று ,2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 83,392 வாக்குகளை பெற்று பின்தள்ளப்பட்டுள்ளார் என்பதை இந்த இடத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய கட்சியினரை போன்று மூன்று கட்சியுடன் இணைந்து மூன்று வேட்பாளர்களை வைத்து வாக்கு சேகரிவில்லை. அவர் தனியாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு அந்த வாக்குகளை பெற்ற்றிருந்தார். நுவரெலியாவில் மூன்று இலட்சம் தமிழ்  வாக்குகள்  இருக்கின்றது. உங்களுடைய தலைவர்  மூன்று கட்சிகளுடன் இணைந்து 83,392 வாக்கு கிட்டத்தட்ட 27% தான் பெற்று இருந்தார். ஆனால் பதுளை மாவட்டத்தில்  வாக்குகளிக்கப்பட்ட 80000 தமிழ் வாக்குகளில், செந்தில் தொண்டமான் தனியாக போட்டியிட்டு கிட்டத்தட்ட  40000 வாக்குகள் பெற்று  தனி ஒருவராக 50% வாக்குகளை பெற்றுள்ளார்.

அதேப்போல் இன்று செந்தில் தொண்டமானை  விட பதுளை மாவட்டத்தில்  குறைந்த வாக்குகளை பெற்றவர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும் ஏனைய மாவட்டங்களில்  செந்தில் தொண்டமானை விட குறைந்த வாக்குகளை பெற்றவர்கள்  கெபினட் அமைச்சராக கூட இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதனால் எங்களை பொருத்தமட்டில் மக்களை வழிநடத்த வேண்டிய தகுதியை  எங்கள் தலைவர் என்றோ பெற்று விட்டார்.

தொண்டமான் குடும்பம் 1910 ஆம் ஆண்டு இலங்கையில் வெள்ளையர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் வெள்ளையர்களை முகாமையார்களாக வைத்து   தேயிலை தொழிற்சாலைகள் நடத்தியவர்கள்.

தொண்டமான் குடும்பம் இ.தொ .காவிற்கு வழங்கிய பணத்தையும், மக்களின் சந்தா பணத்தையும் முதலீடாக வைத்து கடினமான உழைப்பால்  இன்று இ.தொ.கா வளர்ந்துள்ளது. தாங்களின் கட்சியைப் போன்று தரைகுறைவான வேலைகளை செய்து குறுக்கு வழியில்  கட்சியை வளர்க்கவில்லை.  இதன் பிறகு தாங்களுக்கு தெளிவுப்படுத்துவது என்னவென்றால் இ.தொ.காவை  குறைக்கூறி நேரத்தை வீண் செய்யாமல், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில்  தங்களுடைய நேரத்தை பயனுடையதாக பயன்படுத்த  வேண்டும் என்பது இ.தொ.காவின் அவா.  இவ்வாறான தரைக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பீர்களானால் அதற்கும் பதிலடி கொடுக்க நாங்கள் என்றும் தயாராக உள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here