மண்ணெண்ணைக்காக மக்கள் முண்டியடிப்பு முடிந்து விட்டதால் ஏமாற்றம்.

0
190

ஹட்டன் பகுதியில் உள்ள சிபெட்கோ எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு நேற்று (09) மண்ணெண்ணை விநியோகத்ததனையடுத்து பெரும் எண்ணிக்கையிலா பொது மக்கள் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று காலை முதல் நின்று கொண்டிருந்தனர் எனினும் இன்று பகல் மண்ணெண்ணை முடிந்து விட்டதாகவும் மீண்டும் எண்ணை வரும் போது பெற்றுக்கொள்ளுமாறு டோக்கன் வழங்கப்பட்டதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
கடந்த சில வார கால மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களில் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதனால் பொது மக்கள் சமையலுக்காக மண்ணெண்ணை அடுப்பினையே உபயோகித்து வருகின்றனர்.

மண்ணெண்ணை பாவனை அதிகரித்ததன் காரணமாக மண்ணெண்ணைக்கான வரிசையும் நீண்டுள்ளன.

இந்நிலையில் மலையகப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொதியளவு மண்ணெண்ணை கிடைக்காததன் காரணமாக மக்கள் கொட்டகலை ஹட்டன் நோர்வூட் பகுதியில் உள்ள எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பலர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் இருந்தும் எண்ணை பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் பெரும் எண்ணி;க்கையிலானோர் திரும்பிச் செல்வதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here