அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலாமாக மாத்திரம் எரிவாயு விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு இன்றி மேற்கொள்ளப்படும் சேமிப்பு மற்றும் இருப்புகளைக் கையாளுதல் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அனுமதி இன்றி முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான தனிப்பட்ட களஞ்சியப்படுத்தல்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 இற்கும் மேற்பட்ட எரிவாயு கொள்கலன்கள் மற்றும் குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டில் இருந்து எரிவாயு கொள்கலன்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையிலே, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.