இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த அனுமதிப்பத்திர விநியோக செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.