நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன.
அந்தவகையில், அநுராதபுர நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீடு ஆகியவற்றை தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 – 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.