பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா செல்லும் பிரதான பாதை தாழிறங்கியுள்ளது.
மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல இடங்களில் பல இடர்கள் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா செல்லும் பாதை தாழிறங்கியுள்ளது.
மேலும் இப்பாதையின் ஊடாக நுவரெலியா செல்லும் பொதுமக்கள் தவிர டன்சினன் தோட்டத்திற்கு செல்லும் மக்களும் இப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.என இப்பாதை இவ்வாறு தாழிறங்கியுள்ளமையால் இந்பாதையினூடாக செல்பவர்கள் மிக அவதானமாக செல்லுமாறு குறித்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காரணம் அதிக விபத்துக்கள்,உயிரிழப்புக்கள் இப்பாதையின் ஊடாக ஏற்பட்டுள்ளது.எனவே இப்பாதையின் ஊடாக செல்பவர்கள் அவதானமாக செல்லுமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்