மலையகத்தில் மண்ணெண்ணெய்க்காக எண்ணெய் நிரப்பு நிலையங்களில் அதிகாலை முதல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுகின்றன இதனால் அதிகமான மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்க ஆரம்பித்தனர்.
தற்போது மண்ணெண்ணெய் க்கும் எரிவாயு வுக்கும் பாரிய அளவில் தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் நிரப்பு நிலையங்களில் அதிகாலை நான்கு மணி முதல் நிற்பதாகவும் எனினும் எண்ணெய் எப்போது வரும் என்று தெரியாது மக்கள் பெரும் அவதியுறும் தாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு எண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு வரிசையில் நின்று பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பெற்றோல் மற்றும் டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தன.
தூர சேவையில் ஈடுபடும் ஒருசில தனியார் பஸ்கள் டீசல் இல்லாததன் காரணமாக சேவையில் ஈடுபட வில்லை
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மலையக பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுளளதாகவும் இந்த பஸ்களில் சாதாரண கட்டணத்திற்கு மேலதிகமாக பணம் அறவிடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்