மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை சின்னசோலங்கந்த தோட்டத்தை சேர்ந்த திருச்செல்வம் என்பவரை ஆடையில்லாமல் அடித்த சம்பவம் முகநூலில் வைரலாக இவ்விடயம் தொடர்பில் உடன் கவனம் செலுத்துமாறு மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ்குமாரிடம் கூறியதற்கு இணங்க குறித்த விடயம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியூடாக தாக்கப்பட்ட திருச்செல்வம் அழைத்து வரப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணை நிறைவடைந்து முறைப்பாடு பெற்றுக்கொண்டதற்கு இணங்க குறித்த கூலித்தொழிலாளியை தாக்கிய வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்