இலங்கையில் உருவாகும் மற்றுமொரு பாரிய சிக்கல்!

0
180

முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்து வரும் சத்துணவு குறித்து இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை, கோழி இறைச்சி மற்றும் திரவ பால் கொள்வனவு வெகுவாக குறைவடைந்து வருவதாக விவசாயத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைக்கு மூலப்பொருட்களின் விலை உயர்வே காரணம் என அதன் செயலாளர் ரோஹன புஸ்பகுமார (Rohana Pushpakumara) தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கை மக்கள் சத்துணவு தொடர்பான மற்றுமொரு சிக்கலை எதிர்நோக்கவுள்ளதாக எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here