அரிசியை பதுக்குவோர் குறித்து இங்குள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள்

0
163

அரிசியை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மற்றும் அதன் மூலம் அரிசிக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக சில தொலைபேசி இலக்கங்களையும் அந்த அதிகார சபை வழங்கியுள்ளதுடன் அலுவலக நேரங்களில் 1977என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகார சபை, மேல் மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களின் உதவிப் பணிப்பாளர்களுக்கு முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 077 1088895என்ற தொலைபேசி இலக்கத்தையும் வடக்கு மற்றும் வடமேல் மாகாண மக்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 077 1088914என்ற இலக்கத்தையும் தென் மற்றும் சப்ரகமுவ மாகாண மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக 077 1088903என்ற இலக்கத்தையும் வழங்கியுள்ளது.

அத்துடன் வட மத்திய மாகாண மக்கள் 077 1088902 மற்றும் மத்திய மற்றும் கிழக்கு மாகாண மக்கள் 077 1088904 என்ற இலக்கங்களையும் பயன்படுத்தி நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அதிகார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here