கொட்டகலை வர்த்தக சங்கத்திற்கும் அரசாங்க அதிபருக்குமான கலந்துரையாடல்.

0
239

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கொட்டகலை வர்த்தக சங்கத்தினருக்கும் இடையிலா கலந்துரையாடல் 17/06/2022 வெள்ளிக்கிழமை கொட்டகலை புஸ்பா விருந்தகத்தில் இடம்பெற்றது.

கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.கெ.ஜி.எ.ஆர்.பி.கெ.நந்தனவிடம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள 2000 அடங்கிய கூப்பன் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது.அது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்திருந்தார்.மேலும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் பதிவு செய்யப்பட்ட தோட்ட தொழிலாளர்களை தவிர தினக்கூலியாட்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மேசன் தொழில் செய்வோர் என அன்றாடம் வேலை செய்து தன் குடும்பத்தை வழிநடத்தும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இதுபோல நுவரெலியா மாவட்டத்தில் பல நலம் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கொட்டகலை வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதோடு அவற்றை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் கொட்டகலை வர்த்தக சங்கத்தால் எடுக்கப்படுகின்ற அனைத்து மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தான் ஆதரவளிப்பதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.கெ.ஜி.எ.ஆர்.பி.கெ.நந்தன உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here