மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள ஏக்கத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன
மண்ணெண்ணெய்யைப் பெறும் நோக்கில், நேற்று (19) மாலையில் இருந்து இன்று காலை வரை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்புநிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நுவரெலியா பிரதான நகரில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே மண்ணெண்ணெய் வினியோகம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது
இன்றைய தினம் 6,000 லீட்டர் மண்ணெண்ணெய் வினியோகம் செய்வதாக கூறி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் இதற்கமைய 2000 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது
மேலும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றன