அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தலைவருக்கு வாழ்த்து!

0
160
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி  அவர்களுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்கள்  இரண்டு தசாப்தங்க்களுக்கு மேலாக முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களுக்கும் பல சேவைகளை செய்துள்ளார்.
ஜம்இய்யத்துல் உலாமா ஊடாக வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு பல்வேறுப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏற்படுள்ள பொருளாதர நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய நலன்கருதி மென்மேலும் உங்கள்    சேவைகள் பலமடங்கு அதிகரிக்க எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here