12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ….

0
172

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் 22.06.2022 அன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளது.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், அட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here