மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0
255

நாளை (28) தொடக்கம் 3 வாரங்களுக்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், நாளை முதல் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (www.pucsl.gov.lk) உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here