நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தோட்ட பாடசாலைகளின் கல்வியினை மேம்படுத்துவதற்கு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தால் பெறுமதியான போட்டோ பிரதி நகல் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை 29 ம் திகதி அறிஒளி பவுண்டேசனின் தலைவர் அம்மாசி நல்லுசாமி அவர்களின் தலைமையில் கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு ஓல்ரீம் பாடசாலையின் அதிபர் வரதப்பன் நாகரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் ஓல்ரின் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் ஓல்ரீட் லிப்பக்கலை, பிளக்பூல் புனித அந்தோனியார் பாடசாலைகள் உள்ளிட்ட மூன்று பாடசாலைக்ளுக்கு 15 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான போட்டோ பிரதி நகல் இயந்திரங்கள் இதன் போது கையளிக்கப்பட்டன.
இதற்கான அனுசரனையினை கணகரத்தினம் வரதீஸ்வரன் வழிகாட்டலில் லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவர் முருகப்பிள்ளை கோபாலகிருஸ்ணன், அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப்பணிப்பாளர் கே.ஜெகதீஸ்வரன்,ஆசிரியர் ஆலோசகர் கே.சிவாநந்தன்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அறிஒளி பவுண்டேசன் கடந்த 20 வருட காலமாக மலையகப்பகுதியில் உள்ள பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டிற்கும்,அறிநெறி வளர்ச்சிக்கும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்