சைக்கிள் விலை பாரியளவில் அதிகரிப்பு

0
281

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சகர வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள துவிச்சக்கரவண்டி விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் துவிச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் (Bicycle price in sri lanka 2022) அதிகரித்துள்ளது.

தற்போதுவரை (Bicycle price in sri lanka 2022) சாதாரண துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள், ஒரு இலட்சம் ரூபா வரையான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here