புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நேற்றைய 01 தினம் பல புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.இதனால் மலையக புகையிரத சேவைகளும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் இன்றைய தினம் 02 ம் திகதி மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இந்த புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியதனையடுத்து கொழும்பிலிருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கண்டி,கொழும்புக்கும் புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக புகையிரத திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல தனியார் பஸ்கள் இன்றைய தினம் பொது போக்குவரத்தில் ஈடுப்படவில்லை.இதனால் இலங்கை போக்குவரத்து சொந்தமான ஒரு சில பஸ்களும் ஒரு சில தனியார் பஸ்களும் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொது போக்குரவத்து இடம்பெற்றதனால் இன்றைய தினம் அதிகமான பயணிகள் புகையிரத்தினை பயன்படுத்தியிருந்தனர்.இதனால் ஏனைய நாட்களை விட இன்றைய தினம் புகையிரத்தத்தில் பயணஞ் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டன. இதே நேரம் ஹட்டன் எண்ணை நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத போதிலும் வாகனங்கள் கடந்த சில நாட்களாக எரிபொருள் எப்போவாவுது வரும் என்று எண்ணி வரிசையில் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்