நாட்டில் தற்போது பாரிய அளவு பொருளாதார நெருக்கடி மக்களை வதைக்கின்றது. இந்நிலையில் அரசாங்கமும் மக்களை கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது. எதெற்கெடுத்தாலும் கப்பல் வறும் என கதையை கூறி முடித்து விடுகின்றனர்.இந்நிலையில் அரசுக்கெதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்கள் ஓரணியாய் குரல் கொடுக்கும் போராட்டம் 9ம் திகதி தலைநகரம் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்கு இ.தொ.கா முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலை மாற வேண்டுமெனவும் வழமை போல மக்கள் நிம்மதியாக வாழ வகுக்கவே இப்போராட்டத்தை மக்கள் ஓரணியாக ஒன்பதாம் திகதி முன்னெடுக்கின்றனர்.இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங் வேண்டும்.
நாட்டின் மிகப்பெரிய சக்தி மக்கள் சக்தியே என்பதை மக்கள் நிரூபித்து விட்டனர்.இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.எனவே மக்கள் போராட்டத்தை அனைவரும் மதித்து எவ்வித அரசியலோ அல்லது இன,மத,கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் நின்று நாட்டை கட்டியெழுப்ப ஒன்பதாம் திகதி ஒன்றிணைவோம்.மக்கள் போராட்டத்திற்கு இ.தொ.கா தன் முழுமையான ஆதரவை எப்போதும் வழங்குமெனவும் இ.தொ.கா உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்