மலையக பகுதியில் பொது போக்குவரத்து முற்றாக முடக்கம் நகரங்களில் மயான அமைதி

0
138

மலையக பகுதியில் பொது போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும்,கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று (09) மலையகப்பகுதியில் பொது போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.

ஹட்டன் நகரிலிருந்து இலங்கை போக்குவர்து சேவைக்கு சொந்ததான பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.இதனால் ஹட்டன் பஸ் தரிப்பு நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நகரம் உட்பட பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் நகரில் சதொச வர்த்தக நிலையங்கள், மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் நகரில் மயான அமைதி நிலவி வருகின்றன.

மலையகப்பகுதியில் வழமையாக 16 புகையிரத சேவைகள் இடம்பெறுவதாகவும் நேற்று அறிவித்த பொலிஸ் ஊரடங்கு காரணமாக அதிகாலை வேளையில் உடரட்டமெனிக்கே பொடிமெனிக்கே ஆகிய இரண்டு புகையிரத சேவைகளை தவிர ஏனைய புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்து சேவைகள் இல்லாததன் காரணமாக புகையிரத நிலையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொது மக்களே பயணங்களை செல்வதனை காணக்கூடியதாக இருந்தன. ஹட்டன் நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here