எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக QR அட்டையை உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை

0
168

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடபட்டுள்ளதால் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் அனைவரும் இந்த QR முறைமையில் பதிவு செய்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நடைமுறையில் உள்ள வாகன எரிபொருள் அட்டை முறைமையானது வரும் 24ஆம் திகதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

எனவே, அதற்கு முன்பதாக QR குறியீட்டு அட்டை முறையை பதிவு செய்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here