இலங்கைக்கு குறைந்த வட்டி வீதத்திலேயே கடன் வழங்குவதாக சீனா தெரிவிப்பு..

0
248

இலங்கைக்கு குறைந்த வட்டி வீதத்திலேயே, சீனா கடன் வழங்கியுள்ளதாக, சீனாவின் வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சீனாவின் வேலைத்திட்டங்களினால், இலங்கையின் பொருளாதாரத்திற்கும், பொதுமக்களுக்கும் உயர் சலுகைகள் கிடைக்கப் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அனைத்து கூட்டுத் திட்டங்களும், அறிவியல் திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டைப் பின்பற்றி செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை எனவும் ,சீனாவின் ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மூலதனச் சந்தைகள் மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளுக்கான இலங்கையின் கடனில், சீனாவிற்கான கடன் சிறிய சதவீதத்திலேயே காணப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சீனாவினால் பெரும் நிவாரணம் கிடைத்துள்ளதாக சீனாவின் வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் ஷாவோ லிஜியன் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here