நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

0
176

பாதுகாப்பு படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதுகாப்புப் படையினரின் கடமைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இடையூறு விளைவிப்பவர்கள், மோதல்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் அவற்றை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலைங்களில் கடமையிலுள்ள இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் பல்வேறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here