பொது போக்குவரத்தை முன்னெடுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு திருத்தப்படும் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.நேற்று காலி ஹினிதும பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அவதானிக்க வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இன்று ஓரிரு நாட்கள் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அரை மணி நேரத்தில் எரிபொருள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துள்ளோம். நீங்கள் இதை மிகவும் அன்புடன் அனுசரித்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.