குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும்

0
220

இலங்கையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யோகட், ஐஸ்கிறீம் மற்றும் இறைச்சி வகைகள் என்பனவற்றின் விலைகள் உயர்வடையும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணங்கள் 75 வீதத்தினால் உயர்வடைதால் இவ்வாறு விலைகள் உயர்வடையும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

இதன்படி தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டதுடன் உணவுப்பொதியொன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here