மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிராக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு நேற்று வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியதாக அதன் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் இது தொடர்பில் தமது தொழிற்சங்கம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் தெரிவித்தார்.