ரட்டாவின் வங்கி கணக்கில் ஐம்பது இலட்சம் ரூபா வைப்பு : பொலிஸில் முறைப்பாடு

0
176

சமூகவலைத்தள செயற்பாட்டாளரும் காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய நபருமான ‘ரட்டா’ என்றழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ஐம்பது இலட்சம் ரூபா அநாமதேயமாகப் பெறப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தனக்கு தெரியாமல் வங்கியில் பணம் கொடுத்து யாரோ தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை குறித்து கணக்கு உள்ள வங்கிக்கு தகவல் தெரிவித்து, பணத்தை ‘பிடி’ வைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் யார் மூலம் பணம் பெறப்பட்டது என்பதை விசாரிக்குமாறு வங்கிக்கு தெரிவித்துள்ளார்

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய இன்று சனிக்கிழமை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும், ஆனால் அங்கிருந்த உத்தியோகத்தர்கள் வரவு வைக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான பொலிஸ் நிலையமான ஜாஎல பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் சமூக தெரிவித்துள்ளார்.

எனவே நாளை அல்லது நாளை மறுதினம் ஜாஎல பொலிஸில் சென்று முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here