இலங்கைக்கான தாய்லாந்து நாட்டு தூதரகத்தின் நன்கொடையின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் போசாக்கு உணவுகளை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஐதேகவின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.
ஐதேகவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, இலங்கைக்கான தாயலாந்து தூதுவர் , ஐதேகவின் மகளிர் அணித்தலைவி சாந்தினி கொன்ககே, ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.