இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பான சுற்று நிருபம்!

0
207

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்று நிருபமும் பணியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் போது தாய்மார்கள், தங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லது இல்லை என்பதையும் அல்லது இரண்டு வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார்கள், அந்த பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் சத்தியக்கடதாசி வழங்க வேண்டும்.

அந்த சத்தியக்கடதாசியானது, தமது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here